Feed Ilankai

Donations.

இதுபோன்ற படங்களை இணைய தளங்களில் நீங்கள் பார்க்கலாம்

இந்தப் படங்களில் உள்ளவர்கள் ஏழைகள் , அனாதைகள் ,ஆபிரிக்க ஆசிய நாட்டவர்கள் அல்லது இந்தியா பாகிஸ்தான் இலங்கை போன்ற ஏதாவது ஒரு நாட்டவர்கள் என்று என்று எண்ணுவதை தவிர்த்து,

இந்தப் படத்தில் உள்ளது நான் அல்லது என்னுடைய மகன் அல்லது மகள் அல்லது பேரன்-பேத்தி , என்னுடைய சகோதரன் அல்லது சகோதரி அல்லது என்னுடைய அன்பான- நெருங்கிய உறவினர்கள் என்று ஒரு தடவை சிந்தித்துப் பாருங்கள்

அந்த சிந்தனையில் நீங்கள் ஒரு கணம் அமைதியை உணர்வீர்கள் அந்த அமைதி அல்லது மௌனம் என்பதே நாம் தேடும் உண்மை

அந்த அமைதி அல்லது மௌன அல்லது உண்மை நிலையிலிருந்தே இரக்கம் கருணை நேயம் அன்பு என்பவை தோன்றி ஊற்றெடுக்கின்றன. எம்மை அறியாமலேயே எமது மூளையில் அல்லது சித்தத்தில் சில மாற்றங்கள் நடந்து தூய்மை படுத்தல் நிகழ்கின்றது.

எந்தவிதமான சுயநல நோக்கமும் இல்லாமல் பணம் புகழ் மற்றும் வேறு எதிலும் கவனம் செலுத்தாமல், நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகவே தொண்டு செய்பவன் தான் சிறப்பாகப் பணியாற்றுகிறான். இத்தகைய மனநிலையில் ஒருவன் பணியாற்றவல்லவனாகும்போது, அவன் ஒரு புத்த பகவான் ஆகிவிடுவான். உலகத்தையே மாற்றி அமைக்கக்கூடிய வகையில் வேலை செய்யும் சக்தி அத்தகையவனிடமிருந்து வெளிப்படுகிறது.

— சுவாமி விவேகானந்தர்

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன். தனி மனிதனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்.

பணம் பத்தும் செய்யும்.பணம் படைத்தவர்கள் செய்யும் வேலைகளை ஆய்வு செய்து பாருங்கள்உலகின் முதலாவது தரத்திலுள்ள பணக்காரன் Elon Musk. அவர் ஒரு விளையாட்டு பொருளாக Twitter நிறுவனத்தை வாங்கினார். மற்றய பெரும் பணக்காரர்கள் சொந்த செலவில் விண்வெளியில் பறக்க பெரும்தொகை பணத்தை செலவு செய்கின்றார்கள். அவர்கள் அனைவரும் அதை ஒரு முதலீடாக கருதுகின்றார்கள். அந்த செய்கைகளால் மேலும் பணம் சேர்க்க முயல்கின்றார்கள். நாம் அணுகவே முடியாத – சந்திக்கவே முடியாத உயரத்தில் இருக்கும் அவர்களை விடுங்கள். நம்மவர்களை பற்றி பார்ப்போம். இலங்கையில் இருந்து அகதிகளாக பணக்கார நாடுகளில் குடியேறிய சிலர் தமது தேவைக்கு மேல் சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளார்கள். வியாபாரங்கள் தொடங்குவது, வீடு வாங்குவது, சுற்றுலா செல்வது,ஆடம்பரமாக வாழ்வது , ஆடம்பர விழாக்கள் செய்வது, தமக்காக வைரம்- தங்கம் வாங்கி சேமிப்பது, பங்கு சந்தையில் முதலீடு செய்வது போன்றவை மாத்திரமின்றி சொந்த பணத்தில் கோவில் கட்டி வைத்திருப்பவர்களும் உண்டு.எமது நோக்கம் அவர்களை விமர்சிப்பதோ அல்லது அவர்களுக்கு புத்திமதி சொல்வதோ அல்லது அவர்களிடம் பணஉதவி வேண்டுவதோ அல்ல. நாம் தேடுவது மாதம் மாதம் தமது உழைப்பில் போதுமான ஊதியம் பெறும் இரக்க குணமுடைய மக்களையே. இதில் இரக்க குணமுடைய வியாபாரிகளும் அடங்குகின்றார்கள். அவர்களின் பணம் ஏழைகளின் பசியை போக்க உதவும் என்பதே எமது நம்பிக்கைபசி என்பதை நாம் நாளாந்தம் உணர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். பசி எடுத்தவுடன் அந்த பசியை போக்க எமக்கு வசதி இருக்கிறது. ஆனால் பசியை போக்க வசதி இல்லாதவர்கள் இன்றைய உலகில் கோடிக்கணக்கானவர்கள் இருக்கின்றார்கள்.நாம் உலகின் பெரு முதலாளிகளையும், தொண்டு நிறுவனங்களையும் நம்பி இராமல் நாமாக எமது கிராமங்களை பசியற்ற கிராமமாக மாற்ற முயலுவோம். இதன் தொடர்ச்சியாக பசியற்ற நகரங்களையும், பசியற்ற நாடுகளையும் இறுதியில் பசியற்ற உலக எம்மால் உருவாக்க முடியும். நீண்ட பயணம் முதல் அடியிலிருந்துதான் ஆரம்பிக்கின்றது.நீங்கள் மாதாந்தம் இலங்கை பணம் 1000ரூபா கொடுக்கக் கூடிய நிலையில் இருக்கின்றேர்களா?உங்களைப்போன்ற வேறு சிலரையும் சேர்த்து உங்கள் ஊரிலுள்ள சில வறிய குடும்பங்களுக்கு உதவ முயல்வீர்களா ?அவர்களுக்கு பணமாக கொடுக்காமல் இலங்கையில் விளையும் உணவு பொருட்களை (அரிசி, மிளகாய், வெங்காயம், காய்கறிகள்…) வாங்கிக் கொடுக்க உங்கள் ஊரிலுள்ள சிலரை ஒழுங்கு செய்ய முடியுமா? mail@feedilankai.com

எமது நோக்கம்

ஆப்பிள் (Apple) நிறுவனத்தை உருவாக்கிய Steve Jobs தனது சுருக்கமான கதைகள் மூன்றை இங்கு கூறுகின்றார். முடியுமானால் இந்தப் பேச்சு முழுவதையும் கேளுங்கள். https://www.youtube.com/watch?v=UF8uR6Z6KLc

அதில் முக்கியமானது … அவர் கல்லூரியில் படித்தபோது பணம் இல்லாததால்…

 ….சக மாணவர்களின் விடுதி அறையில் தரையில் படுத்து உறங்கி இருக்கின்றார் 

….பணத்திற்காக குளிர்பான வெற்று போத்தல்களை சேகரித்து பணம் பெற்றிருக்கின்றார் 

….வாரம் தோறும் ஹரே கிருஷ்ணா மையத்தில் கிடைக்கும் இலவச உணவுக்காக   பல மைல்கள் கால் நடையாக நடந்திருக்கின்றார் 

பசியால், பணம் இல்லாததால் இதுபோன்ற பல துன்பங்களை நம்மில் பலர் அனுபவித்திருக்கின்றோம். இன்றும் பலர் இதுபோன்று  வாடிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். 

அதற்கு நாம் என்ன செய்யலாம் என்று சிலர் சிந்தித்ததன் விளைவுதான் இந்த இணைய தளம்.

இரக்க குணமுடைய தமிழர்களை ஒன்றிணைத்து “பசியற்ற கிராமங்களை” உருவாக்க முயல்வதே எமது நோக்கம்.