Volunteers.


தன்னலமற்ற தொண்டர்கள்
இந்துக் கோவில்களில் பல விக்கிரகங்களை நீங்கள் காணலாம். ஒரு கோவிலில் இருக்கும் ஒரு விக்கிரகம் மற்றய கோவில்களில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் உண்டியல் இல்லாத கோவில்கள் எதையாவது – எங்காவது நீங்கள் கண்டிருக்கின்றீர்களா?
“இறை சேவைகள் வியாபாரமாகியுள்ள இன்றய உலகில் வியாபாரத்தை இறை சேவையாக்க முடியும்”
காலம்சென்ற எமது உறவுகள் விண்ணுலகில் இருப்பதாக கற்பனை செய்து ஆலயங்களில் வசதிபடைத்த அந்தணர்களின் வாழ்க்கைக்கும் ஆலய முதலாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கும் காணிக்கைகள் கொடுப்பதை விட காலம்சென்ற எமது உறவுகள் மறு பிறப்பெடுத்து இந்த உலகில் உயிர்களாக நடமாடுகிறார்கள் என்று நம்பி உயிர்களுக்கு உணவளிக்க – உதவ முயல்வோம்.
புதிய உலகத்தை உருவாக்க (கொலை செய்யும் கருவிகளை விடுத்து) ஆத்ம சக்தியையும் அறிவாயுதத்தையும் நீங்கள் பாவிக்க விரும்பினால் சிறிய முதலீட்டுடன் தொழில்களை உருவாக்கி பலருக்கு வேலை வாய்ப்புகளையும், அந்த தொழில்களில் கிடைக்கும் இலாபத்தில் ஏழைக்கு உணவளிக்கவும் முயலுங்கள் .
ஒருவனால் இது முடியாது .. நீங்கள் மனது வைத்தால் எம்மால் உலகம் முழுவதும் இதை செய்ய முடியும்.