Thavady


Thavady.

எமது – தாவடி –  ஊருக்கு உணவளிப்போம்.
சீவ காருண்யமே மோட்ச  வீட்டின் திறவுகோல்.

தாவடி ஒரு சிறிய கிராமம்.கொக்குவில்,கோண்டாவில் , இணுவில், சுதுமலை என்பன அயல் கிராமங்கள். அதன் பரப்பளவு 1-2 சதுர கி மீ க்கு இடைப்பட்டதே.
பல வருடங்களுக்கு முன் தாவடி சுருட்டு, தாவடி புகையிலை என்பன இலங்கை முழுவதும் பிரபல்யமானதாக இருந்தது. அப்போது தாவடியில் சுருட்டு கொட்டில்கள் பல இருந்தன.

MSK , நவரத்தினம், அப்பச்சிப்பிள்ளை , நாகலிங்கம், சோமு, குமாரசாமி . சுப்பிரமணியம் , … போன்ற பெரிய மற்றும் பல சிறிய சுருட்டு கொட்டில்கள் நூற்றுக் கணக்கானவர்களுக்கு வேலை கொடுத்தது. அயல் கிராமங்களில் இருந்தும் பலர் சைக்கிள்களில் சுருட்டு வேலைக்கு வருவார்கள். பலர் உடுவில் போன்ற கிராமங்களில் இருந்தும் வேலைக்கு வருவார்கள். இன்று தாவடியில் பிறந்தவர்கள், வாழ்ந்தவர்கள், அவர்களை திருமணம் செய்தவர்கள், அவர்களின் பிள்ளைகள்- பேரப்பிள்ளைகள் … உலகம் முழுவதும் பரந்து இருக்கின்றார்கள். சிலர் மிக பிரபல்யமான பல்கலை கழகங்களில் போதனை செய்கின்றார்கள், பலர் மருத்துவர், பொறியியல் , கணனி, வணிகம் போன்ற பல துறைகளில் உலகம் முழுவதும் பிரபல்யமாக இருக்கின்றார்கள்.

சொல்லப்போனால் அமெரிக்காவில் NASA இல் பணியாற்றியவர்களின் மற்றும் உலக பிரபல்யங்களை சந்தித்த தாவடியின் வாரிசுகளின் புகைப்படங்களும் எம்மிடம் உள்ளது. அவர்களின் அனுமதியின்றி அவற்றை இந்த தளத்தில் வெளியிடுவது பொருத்தமானதாக இருக்காது. (அவர்களை தொடர்புகொண்டு அவர்கள் விரும்பினால் இங்கு வெளியிடுவோம்)

தாவடியின் வாரிசுகளான நாம் “பசியற்ற தாவடி” யை உருவாக்குவோம். தாவடியில் வசிக்கும் இல்லாத இயலாத மக்களின் பசியை போக்க நாம் முயலுவோம். நீங்கள் உங்கள் உறவுகளுடன் தொடர்புகொண்டு

அங்கு வாழும் அனைவருக்கும் ஒரு வேளை உணவாவது கிடைக்க வழி செய்ய முயலுங்கள். அங்கு உள்ள விவசாய நிலங்களில் மற்றும் வீடுகளில் உணவுக்கான காய்கறிகள் உற்பத்தி செய்ய உதவுங்கள். அவர்கள் விளைவிக்கும் பொருட்களை விற்பனை செய்ய உதவுங்கள்.

தாவடி பாடசாலையில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு உணவளிக்கும் சேவைக்கு உதவுங்கள் அங்கு உள்ள கோவில் நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு மக்களுக்கு சமைத்த உணவு கொடுத்து உதவும் சேவைக்கு உதவுங்கள்.

தாவடி பாடசாலையில் படிக்கும் மாணவ – மாணவிகளுக்கு மதிய உணவு அளிக்கும் சேவையை பழைய மாணவர் சங்கம் செயல்படுத்துகின்றது. அதற்கு பண உதவி செய்ய விரும்புபவர்கள் பழைய மாணவர் சங்க வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பலாம். அனுப்பும் அன்பர்கள் விரும்பினால் அவர்களின் தகவல்கள் இந்த இணைய தளத்தில் வெளியிடப்படும்.

பழைய மாணவர் சங்க வங்கி கணக்கு விபரம்
Past pupils association, J/Thavady Hindu Tamil Mixed school,
Account NO. 1095030
Bank of Ceylon,
2nd branch,
Stanley Road,
Jaffna.
Sri Lanka.